சுந்தரவேலவர் கோயில் மண்டலாபிஷேக விழா
சுந்தரவேலவர் கோயில் மண்டலாபிஷேக விழா
சுந்தரவேலவர் கோயில் மண்டலாபிஷேக விழா
ADDED : மே 26, 2025 02:47 AM

கூடலுார்,: கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் மண்டலாபிஷேக விழா நடந்தது.
இக்கோயில் கும்பாபிஷேகம் ஏப்.7ல் நடந்தது. 48 நாட்கள் பொங்கல் முடிந்து நேற்று மண்டலாபிஷேக விழா நடந்தது. கூடல் சுந்தரவேலவருக்கும், சுந்தர விநாயகர், துர்க்கை, சரஸ்வதி, மகாலட்சுமி, ஸ்ரீ நாகராஜர், சுந்தரேஸ்வரர், தக்ஷிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, காலபைரவர் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது. முன்னதாக யாக பூஜை நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஒக்கலிகர் மகாஜன சங்க தலைவர், செயலாளர், பொருளாளர், நிர்வாகிகள் செய்திருந்தனர்.