ஆண்டிபட்டி, : பிராதுக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் விருமாண்டி 32, இவரது மனைவி மகேஸ்வரி 24, இவர்களுக்கு இரு இரு குழந்தைகள் உள்ளனர்.
விருமாண்டிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு செல்வார். வருமானம் இன்றி குடும்பத்தினர் சிரமம் அடைந்தனர். இதனால் மனைவி மகேஸ்வரி இரு குழந்தைகளுடன் அவரது பாட்டி வீட்டிற்கு சென்று விட்டார். கணவர் மனைவியை வீட்டிற்கு வருமாறு பலமுறை அழைத்துள்ளார். மனைவி வருவதில் தாமதம் ஏற்பட்டதால் மனம் உடைந்த விருமாண்டி வீட்டில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். மனைவி மகேஸ்வரி புகாரில் க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.