Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ தனிமையை தவிர்த்து மனம் விட்டு பேசினால் தற்கொலையை தவிர்க்கலாம் தேனி மன நல மருத்துவமனை துறைத் தலைவர் தகவல்

தனிமையை தவிர்த்து மனம் விட்டு பேசினால் தற்கொலையை தவிர்க்கலாம் தேனி மன நல மருத்துவமனை துறைத் தலைவர் தகவல்

தனிமையை தவிர்த்து மனம் விட்டு பேசினால் தற்கொலையை தவிர்க்கலாம் தேனி மன நல மருத்துவமனை துறைத் தலைவர் தகவல்

தனிமையை தவிர்த்து மனம் விட்டு பேசினால் தற்கொலையை தவிர்க்கலாம் தேனி மன நல மருத்துவமனை துறைத் தலைவர் தகவல்

ADDED : செப் 12, 2025 04:48 AM


Google News
Latest Tamil News
தேனி: தனிமையை தவிர்த்து மனம் விட்டு குடும்ப உறவினர்களிடம் பேசினால் தற்கொலை எண்ணங்களை தடுத்து நிறுத்தலாம்.'' என தேனி மன நல ஆராய்ச்சி மற்றும் போதை மறுவாழ்வு மருத்துவமனையின் மனநலயியல்துறைத் தலைவர் டாக்டர் அருண் வெங்கடேஷ் தெரிவித்தார்.

தேனி சமதர்மபுரத்தில் 1971 முதல் அரசு தாலுகா மருத்துவமனையாக செயல்பட்டது. 2004ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை துவங்கிய பின், மருத்துவக் கல்லுாரி நிர்வாகத்துடன் இணைத்தது. தற்போது 40 படுக்கைகளுடன் மனநல சிகிச்சை மற்றும் போதை மறுவாழ்வு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு மனநலயியல் துறைத் தலைவர் டாக்டர் அருண்வெங்கடேஷ் தலைமையில் டாக்டர்கள் 5 பேர், 8 உதவி பேராசிரியர்கள், மனநல சிகிச்சை உதவிக்கான சிறப்பு பயிற்சி பெற்ற 3 ஆண் செவிலியர்கள், மருந்தாளுநர், 4 பெண் நர்ஸ்கள் பணியில் உள்ளனர்.

இம் மையத்தின் செயல்பாடுகள் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து மனநலயியல் துறைத் தலைவர் தினமலர் நாளிதழ் அன்புடன் அதிகாரி' பகுதிக்காக பேசியதாவது:

இங்கு என்னென்ன பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு மனநல பிறழ்வு பாதிப்பு ஏற்பட்டவர்கள், 80 சதவீதம் வரை மனநலம் பாதித்தவர்கள், போதை பொருட்கள் பயன்படுத்தி அந்த பழக்கத்திற்கு அடிமையானவர்களைஅனுமதிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட சிகிச்சைகள் அளித்து 100 சதவீதம் குணப்படுத்தி உறவினர்கள், பெற்றோர்களிடம் ஒப்படைக்கிறோம்.

உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பற்றி ஆண்டுதோறும் செப்.10ல் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. மருத்துவக்கல்லுாரி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம், பள்ளிக் கல்லுாரிகளில் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தி, தற்கொலை எண்ணங்கள் மேலோங்காமல் நேர்மறை எண்ணங்கள் உருவாக்குவதற்கான பயிற்சிகளைவழங்கி வருகிறோம்.

தற்கொலை எண்ணங்கள் அதிகரிக்க காரணம், அறிகுறிகள் என்ன நம்பிக்கையற்ற மனநிலை, துாக்கமின்மை, எதிர்பாராத மனவலியுடன் கூடிய பாதிப்பு. உயிருக்கு அபாயமான எண்ணங்களை மனதில் தோன்றும் சூழல் உருவாவது. திடமான மனதிற்கு எதிரான மனோதிடம் உருவாவது. உதாரணத்திற்கு நான் வாழ வேண்டிய அவ சியம் இல்லை. நான் இறந்து போனால் நல்லது.என்ற எண்ணம் மேலோங்குவது, தொடர் தனிமை, குடும்பம், நண்பர்கள், வேலை, பழக்க வழக்கம் ஆகியவற்றில் இருந்து விரிவான பிரிவை ஏற்படுத்தும் சூழ்நிலை ஏற்படுவது உள்ளிட்ட அறிகுறிகள் தற்கொலை எண்ணம் ஏற்படுவதற்கான மிக முக்கிய அறிகுறிகளாகும். இவற்றை தவிர்க்க என்ன செய்ய வேண்டும். நெருக்கமான உறவுகள், நண்பர்களிடத்தில் உதவி கேட்கலாம். நண்பர்களிடம், உறவினர்களிடம் மன விட்டு பேசலாம். உணர்வுகளை மனதிற்கு நெருக்கமான பிறரிடத்தில் (தாயிடம் கூறுவது போல்) பகிர்ந்து கொள்ளும் போது மன பாரம் குறைந்து மனம் லோசாகி மன வலி குறையும். அப்போது இந்த எண்ணங்கள் எழாது. குறிப்பாகஇம்மாதிரியான பாதிப்பு உள்ளவர்களை உறவினர்கள், மாணவர்கள் என யார் அடையாளம் கண்டாலும். உடனடியாக மன நல டாக்டர்களின் சிகிச்சை பெற அழைத்து செல்வது மிக மிக அவசியம். தேனி மனநலயியல் சிகிச்சை மையத்திலும் சிகிச்சை அளித்து, முழுவதும் குணப்படுத்தலாம்.

தேனி போதை மறுவாழ்வு மைய வசதி பற்றி.. இங்குள்ள சிகிச்சை மையத்தில் தற்கொலை எண்ணங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிநபர் உளவியல் தெரபி, குடும்ப உறவுகளின் உளவியல் தெரபி, அறிவாற்றல் மூலம் உளவியல் மருத்துவம் என, இம்மூன்று சிகிச்சைகளும் வழங்கபபடும். பின் அவர்களை ஆறு மாதங்கள், அல்லது கால அளவு அதிகரித்த பின் பூரண குணமடைந்ததும் டிஸ்சார்ஜ்' செய்துவிடுவோம்.

தற்கொலை பாதிப்புகள் குறித்த விபரங்கள் பல ஆண்டுகளாக ஆண்கள் தான் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஆய்வில் தெரியவந்துள்ளது. நால்வரில் 4:1 என்ற விகிதத்தில் ஆண்கள் முடிவு எடுப்பதில் முந்தி, தற்கொலை செய்து கொள்கின்றனர். 2021 தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி.,) இறுதியாக வெளியிட்ட விபரங்களின் அடிப்படையில் ஒரு ஆண்டிற்கு தமிழ்நாடு 18,925 பேர், மகாராஷ்டிராவில் 22,207 பேர் தற்கொலை செய்து, எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளது. இதில் பெண்களை விட ஆண்கள் தற்கொலை எண்ணம் அதிகம் மேலோங்குவதால் அதுகுறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிக்கல்லுாரிகள் பொது இடங்களில் நடத்த உள்ளோம்.

மனநல சிகிச்சை பெற உதவி எண் விபரம் 14416 என்ற மனநல சிகிச்சைக்கான பொது உதவி எண்ணில் அழைத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அழைத்து சிகிச்சை அளிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இயலாது., என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us