/உள்ளூர் செய்திகள்/தேனி/ கிராம பகுதிகளில் நிறுத்திய டவுன் பஸ்களை மீண்டும் இயக்க ஆய்வு கிராம பகுதிகளில் நிறுத்திய டவுன் பஸ்களை மீண்டும் இயக்க ஆய்வு
கிராம பகுதிகளில் நிறுத்திய டவுன் பஸ்களை மீண்டும் இயக்க ஆய்வு
கிராம பகுதிகளில் நிறுத்திய டவுன் பஸ்களை மீண்டும் இயக்க ஆய்வு
கிராம பகுதிகளில் நிறுத்திய டவுன் பஸ்களை மீண்டும் இயக்க ஆய்வு
ADDED : ஜூன் 06, 2025 03:16 AM
தேனி: போடியில் இருந்து கோடாங்கிபட்டி, பூதிப்புரம் வழியாக தேனி வரை சென்ற டவுன் பஸ், தேனி பழைய பஸ் ஸ்டாண்டு முதல் அன்னஞ்சி வரையும், தேனி அரண்மனைப்புதுார், வேதபுரீ , வயல்பட்டி, சத்திரப்பட்டி, வீரபாண்டிவரையிலான வழித்தடத்தில் இயங்கிய டவுன்பஸ்கள். தேனியில் இருந்து அரண்மனைப்புதுார், கோட்டைப்பட்டி, பள்ளபட்டி, பாலகிருஷ்ணபுரம் வரை டவுன்பஸ்கள் இயக்கப்பட்டது.
கடந்த பல மாதங்களாக இந்த வழித்தடங்களில் அரசு டவுன்பஸ்கள் இயக்கப்பட வில்லை. இதனால் இப் பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவர்கள் தேனி மற்றும் வெளியூர்களுக்கு சென்ற வர சிரமம் அடைந்தார்.
இந்த வழித்தடங்களில் போக்குவரத்து வசதியைமேம்படுத்த டிராபிக் போலீசார் ஆய்வு செய்தனர்.
காலை, மாலை நேரங்களான பீக் ஹவர்சில் இந்த வழித்தடங்களில் அதிகளவில் பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்துத்துறைக்கு பரிந்துரை செய்ய, எஸ்.பி.,க்கு அறிக்கை வழங்கினர்.