/உள்ளூர் செய்திகள்/தேனி/ மரம் வளர்ப்பின் அவசியம் மாணவிகள் விளக்கம் மரம் வளர்ப்பின் அவசியம் மாணவிகள் விளக்கம்
மரம் வளர்ப்பின் அவசியம் மாணவிகள் விளக்கம்
மரம் வளர்ப்பின் அவசியம் மாணவிகள் விளக்கம்
மரம் வளர்ப்பின் அவசியம் மாணவிகள் விளக்கம்
ADDED : மார் 23, 2025 07:12 AM
கம்பம் : மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் ராலியா பேகம், ரதி, ரித்திகா, செருபியா, சக்தி ,கோ.ரித்திகா, சக்திஜா, சம்யுக்தா ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் கம்பத்தில் தங்கி விவசாயிகள் பின்பற்றும் தொழில்நுட்பங்களை தெரிந்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக கம்பம் அரசு கள்ளர் பள்ளியில் உலக காடுகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு ஓவிய போட்டி நடத்தினார்கள்.
தொடர்ந்து பள்ளி வளாகத்தில் துளசி, கண்டங்கத்தரி, ஆடாதொடை, வேம்பு போன்ற மூலிகை செடிகள் நடவு செய்தனர். மாணவர்களிடம் மரங்கள் வளர்க்க வேண்டியதன் அவசியம் பற்றி விளக்கினார்கள். தொடர்ந்து காடுகளை பாதுகாக்க வலியுறுத்தி மாணவர்கள் ஆசிரியர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது.