/உள்ளூர் செய்திகள்/தேனி/ போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பாதிப்பு குறித்து மாணவர்கள் நடத்திய வீதி நாடகம் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பாதிப்பு குறித்து மாணவர்கள் நடத்திய வீதி நாடகம்
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பாதிப்பு குறித்து மாணவர்கள் நடத்திய வீதி நாடகம்
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பாதிப்பு குறித்து மாணவர்கள் நடத்திய வீதி நாடகம்
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பாதிப்பு குறித்து மாணவர்கள் நடத்திய வீதி நாடகம்
ADDED : ஜூன் 28, 2025 11:53 PM

கம்பம்: கம்பத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம், தெருவோர நாடகங்கள் நடைபெற்றது.
கம்பம் நாலந்தா இன்னோவேசன் பள்ளி சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கம்பம் அரசு கள்ளர் மேல் நிலைப்பள்ளி அருகே துவங்கிய ஊர்வலத்திற்கு பள்ளி தாளாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.
மெயின்பஜார், காந்தி சிலை, அரசு மருத்துவமனை வரை மாணவ மாணவிகள் பேனர்களை ஏந்தி, போதைப் பொருள்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அரசு மருத்துவமனை அருகில் போதைப் பொருள் தீங்குகள், குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை விளக்கும் ஓரங்க நாடகம் மாணவ மாணவிகளால்நடத்தப்பட்டது.
உத்தமபாளையம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சூரிய திலகராணி, இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், முத்துலட்சுமி பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை அலுவலக மேலாளர் விக்னேஷ், ஒவிய ஆசிரியர் ராஜேஸ்கண்ணா செய்திருந்தனர்.
சின்னமனூர்:சின்னமனூரில் ஜூனியர் ரெட் கிராஸ் சங்கம் சார்பில் கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளி, கணக்கு வேலாயி அம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி,ஒடைப் பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்பு ஊர்வலம் நடந்தது.
தலைமையாசிரியர்கள் ராமகிருஷ்ணன், கிருஷ்ணலதா, எரசை பட்டதாரி ஆசிரியர் பொன்னழகர், எஸ்.ஐ. மோகன்தாஸ் காந்தி பங்கேற்றனர். உதவி தலைமையாசிரியர் கவுதம், பட்டதாரி ஆசிரியர் முருகன், ஜே.ஆர்.சி. ஆலோசகர் கன்னிகா, ஆசிரியைகள் விஜயலட்சுமி, சாருபாலா, மேரி மார்க்க ரெட் ஊர்வலத்தை ஒருங்கினைத்தனர். ஆசிரியர் அருள் அடைக்கல் ராஜ் நன்றி கூறினார்.
முதல்வர் மோகன், துணை முதல்வர் மலர்விழி உள்ளிட்ட பலர்பங்கேற்றனர்.
உத்தமபாளையம்: விகாசா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளி சேர்மன் இந்திரா தலைமை வகித்தார்.
தாளாளர் உதயகுமார் ஒருங்கிணைத்தார். பைபாஸ் ரோட்டில் துவங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது. ஊர்வலத்தில் முதல்வர் குமரேசன், ரெட்கிராஸ் பொறுப்பாளர் செல்வக்குமார் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகள் போதைப் பொருள்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.