ADDED : ஜூன் 01, 2025 12:31 AM
பெரியகுளம்,:பெரியகுளம் நகராட்சி பகுதியில் சுற்றி திரிந்த தெரு நாய்களுக்கு, சுடுகாட்டு ரோட்டிலுள்ள நகராட்சி நாய்கள் கருத்தடை அறையில் ஆப்பரேஷன் செய்யப்பட்டது.
கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் கோவில் ராஜா, துணை இயக்குனர் அப்துல் ஆகியோர் மேற்பார்வையில் டாக்டர்கள் 10 க்கும் அதிகமான நாய்களுக்கு ஆப்பரேஷன் செய்தனர். தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆப்பரேஷனுக்கு பின் நாய்கள் பண்டுவம் பிரிவில் கண்காணிக்கப்பட்டது. கருத்தடை ஆப்பரேஷன் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.