/உள்ளூர் செய்திகள்/தேனி/ வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த ஆலோசனை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த ஆலோசனை
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த ஆலோசனை
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த ஆலோசனை
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த ஆலோசனை
ADDED : செப் 18, 2025 05:46 AM
தேனி : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் துவங்கி உள்ளது. தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தபணிகள் துவங்க உள்ளன. திருத்தப்பணியில் தொழில்நுட்பங்களை கையாள்வது பற்றி தேர்தல் பிரிவு அலுவலகத்தில் கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் துணை தாசில்தார்கள் ராஜா, செந்தில், ராஜாராம், சதீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அலுவலர்கள் கூறுகையில், '2002ம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலுடன் தற்போதைய வாக்காளர் பட்டியல் தொழில்நுட்ப பணியாளர் மூலம் சரிபார்க்கப்பட உள்ளது. இந்த சரிபார்ப்பு பணிகள் விரைவில் துவங்க உள்ளன. பணிகளை விரைவாக முடித்தல், அதிக பணியாளர்கள் பயன்படுத்துதல் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்றனர்.