ADDED : மே 24, 2025 11:51 PM
உத்தமபாளையம் : க.புதுப்பட்டி பட்டாளம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் முருகன் மகன் சென்றாயன் 22. இவர் அதே வீதியில் வசிக்கும் ராமர் என்பவரின் மருமகனுக்கு தனது மண்வெட்டியை ஓசி கொடுத்துள்ளார். கொடுத்த மண்வெட்டியை கேட்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்த ராமருக்கும் சென்றாயனுக்கும் வாக்குவாதம் ஏற்படுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த ராமர் 69, மற்றும் அவரது உறவினர் அழகர்சாமி 34 ஆகியோர் சேர்த்து கட்டையால் சென்றாயன் மண்டையில் தாக்கினர். காயமடைந்த சென்றாயன் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். உத்தமபாளையம் எஸ்.ஐ. இளங்கோவன் வழக்கு பதிவு செய்து, அழகர்சாமி, ராமரை கைது செய்தனர்.