/உள்ளூர் செய்திகள்/தேனி/ லோக் அதாலத்தில் ரூ.18 கோடிக்கு தீர்வு லோக் அதாலத்தில் ரூ.18 கோடிக்கு தீர்வு
லோக் அதாலத்தில் ரூ.18 கோடிக்கு தீர்வு
லோக் அதாலத்தில் ரூ.18 கோடிக்கு தீர்வு
லோக் அதாலத்தில் ரூ.18 கோடிக்கு தீர்வு
ADDED : செப் 14, 2025 04:07 AM

தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நடந்த லோக் அதாலத்தில் 2202 வழக்குகளில் ரூ. 18 கோடி மதிப்பில் தீர்வு காணப்பட்டது.
மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் ஜெ.நடராஜன் தலைமையில் லோக் அதாலத் நடந்தது. சார்பு நீதிபதி பரமேஸ்வரி, அமர்வு நீதிபதிகள் கணேசன், அனுராதா, சங்கர், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ரஜினி, மாவட்ட உரிமையியல் நீதிபதி அலெக்ஸ்ராஜ், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் ஆசைமருது, ஜெயபாரதி பங்கேற்றனர்.
பெரியகுளம் நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி சந்திரசேகர், மாவட்ட உரிமையியல் நீதிபதி ரகுநாத், நீதித்துறை நடுவர் கமலநாதன் முன்னிலை வகித்தனர்.
உத்தமபாளையத்தில் சார்பு நீதிபதி சிவாஜிசெல்லையா, குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் அமலானந்த கமலகண்ணன், காமராசு பங்கேற்றனர்.ஆண்டிபட்டியில் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுகந்தன், நீதித்துறை நடுவர் பாசில்முகம்மது முன்னிலை வகித்தனர்.
போடியில் சார்பு நீதிபதி சையது சுலைமான் உசேன், குற்றவியல் நீதித்துறை நடுவர் நல்லகண்ணன், மாவட்ட உரிமையியல் நீதிபதி முகம்மது ஹாசிம் முன்னிலை வகித்தனர். மாவட்ட நீதிமன்றங்களில் வங்கிகளில் வாராக்கடன்களுக்காக நடத்தப்பட்ட லோக் அதாலத்தில் 2202 வழக்குகளில் ரூ.18 கோடி மதிப்பிற்கு தீர்வு காணப்பட்டது.