/உள்ளூர் செய்திகள்/தேனி/ மானாவாரி விதைப்புக்கு உரிய விதைகள் தயார் மானாவாரி விதைப்புக்கு உரிய விதைகள் தயார்
மானாவாரி விதைப்புக்கு உரிய விதைகள் தயார்
மானாவாரி விதைப்புக்கு உரிய விதைகள் தயார்
மானாவாரி விதைப்புக்கு உரிய விதைகள் தயார்
ADDED : மே 25, 2025 05:11 AM
கம்பம் : கம்பம் பகுதியில் சாரல் மழை துவங்கியதால் மானாவாரியில் விதைப்பு செய்ய மொச்சை, தட்டை, நிலக்கடலை, எள்ளு, குதிரைவாலி, கம்பு விதைகள் தயார் நிலையில் இருப்பதாக வேளாண் துறை அறிவித்துள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கில் முல்லைப் பெரியாறு பாசனத்தில் 14, 707 ஏக்கர் பரப்பில் இரு போக நெல் சாகுபடி நடைபெறுகிறது. கூடலூரில் ஆரம்பித்து கம்பம், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப் புரம், தேவாரம் வரை ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் பயறு வகைகள், சிறு தானியங்கள் , எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்வது வழக்கம். குறிப்பாக மழை பெய்தால் மானாவாரி நிலங்களில் விவசாயம் செய்ய முடியும். தற்போது கம்பம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே சாரல் துவங்கி உள்ளது. மானாவாரி நிலங்களில் ஈரப்பதம் நிறைந்த காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் சாகுபடிக்கு தயாராகி வருகிறார்கள் .
இது தொடர்பாக கம்பம் வேளாண் துணை அலுவலர் குணசேகர் கூறுகையில், ' சாரல் மழை துவங்கி உள்ளது. மானாவாரியில் விதைக்க உளுந்து, நிலக்கடலை, எள்ளு , தட்டைப் பயறு, குதிரைவாலி, கம்பு, சோளம் விதைகள் உள்ளன. இரண்டு எக்டேருக்கு 40 கிலோ, நிலக்கடலை 200 கிலோ விதை வழங்கப்படும். விதைகளுடன் உயிர் உரங்கள் மற்றும் நுண்ணுாட்ட உரங்களும் வழங்கப்படும். இவை 50 சதவீத மானிய விலையில் விற்கப்படுவதால், விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள அழைக்கப் படுகின்றனர் என்றார்.