/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேசிய டென்னிகாய்ட் போட்டி தங்கம் வென்ற பள்ளி மாணவர்கள் தேசிய டென்னிகாய்ட் போட்டி தங்கம் வென்ற பள்ளி மாணவர்கள்
தேசிய டென்னிகாய்ட் போட்டி தங்கம் வென்ற பள்ளி மாணவர்கள்
தேசிய டென்னிகாய்ட் போட்டி தங்கம் வென்ற பள்ளி மாணவர்கள்
தேசிய டென்னிகாய்ட் போட்டி தங்கம் வென்ற பள்ளி மாணவர்கள்
ADDED : செப் 16, 2025 04:54 AM
கம்பம்: தேசிய அளவிலான டென்னிகாய்ட் போட்டியில் கம்பம் சி.பி.யூ., மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்றனர்.
தேசிய அளவிலான ரிங் வளை பந்து போட்டி உத்தரப் பிரதேசம், லக்னோவில் நடந்தது. இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் இப் போட்டியில் பங்கேற்றனர்.
சப் ஜூனியர் பிரிவில் கம்பம் சிபியூ மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்1 மாணவர் ருத்ரன், 10 ம் வகுப்பு மாணவர் லத்தீஷ் தமிழக அணி சார்பில் பங்கேற்றனர். இவர்கள் தமிழக அணிக்கு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்று தங்கப் பதக்கம் வென்றனர். சப் ஜூனியர் இரட்டையர் பிரிவில் மாணவர் லத்தீஷ் தங்க பதக்கத்தையும், ஒற்றையர் பிரிவில் மாணவர் ருத்ரன் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் திருமலை சுதாகரன், பொருளாளர் ராமசாமி, தலைமையாசிரியர் சையது அப்தாகிர் பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள். பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குநர் ஆசிக், உடற்கல்வி ஆசிரியர் இராதாகிருஷ்ணன் ஆகியோர்களும் கவுரவிக்கப்பட்டனர்.