ADDED : ஜன 28, 2024 05:03 AM
தேனி ; கடமலைக்குண்டு ஹயக்கிரீவா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது.
பள்ளி தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். பள்ளி அறக்கட்டளை உறுப்பினர் லுவன் வரவேற்றார். பள்ளி முதல்வர் ஜீவானந்தம் ஆண்டறிக்கை வாசித்தார். பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவஹர் பேசினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. போட்டிகள், படிப்பில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.