ADDED : செப் 16, 2025 12:23 AM
பெரியகுளம்; தேனி மாவட்டம், பெரியகுளம் கீழ வடகரை, ஸ்டேட் பாங்க் காலனி, கோல்டன் சிட்டியை சேர்ந்த முகமது ஸ்பாகுல் 24, என்பவரின் பூட்டியிருந்த வீட்டின் கதவு, பீரோ உடைத்து ரூ.7 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
கோல்டன் சிட்டியில் முகமது ஸ்பாகுல், பவுசியாபேகம் வீட்டை ஒத்திக்கு வாங்கி தனது தாயார் ஷகிலாபானுவுடன் 52. குடியிருந்து வருகிறார். செப்.12ல் மதுரையில் உறவினர் வீட்டிற்கு சென்ற தாயார் அங்கேயே தங்கியுள்ளார். ஓட்டலில் கேஷியராக பணிபுரியும் முகமது ஸ்பாகுல் நேற்று முன்தினம் (செப்.14) மாலை 6:30 மணிக்கு இரவு பணிக்கு சென்று விட்டு, நேற்று காலை (செப்.15) 7:25 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். வீட்டின் கதவு பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ. 7 லட்சம் தங்க நகைகள் 'டிவி' மற்றும் ஹோம் தியேட்டர் திருடுபோனது தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.