/உள்ளூர் செய்திகள்/தேனி/ ரோடு வசதி இல்லாத முதுவாக்குடிக்கு ரூ1.67 கோடி செலவில் கல் பாதை வசதி ரோடு வசதி இல்லாத முதுவாக்குடிக்கு ரூ1.67 கோடி செலவில் கல் பாதை வசதி
ரோடு வசதி இல்லாத முதுவாக்குடிக்கு ரூ1.67 கோடி செலவில் கல் பாதை வசதி
ரோடு வசதி இல்லாத முதுவாக்குடிக்கு ரூ1.67 கோடி செலவில் கல் பாதை வசதி
ரோடு வசதி இல்லாத முதுவாக்குடிக்கு ரூ1.67 கோடி செலவில் கல் பாதை வசதி
ADDED : ஜூன் 15, 2025 07:00 AM

போடி : குரங்கணி - டாப்ஸ்டேஷன் மலைப் பாதையில் ரோடு வசதி இல்லாத முதுவாக்குடி மலைக் கிராமத்திற்கு ரூ.1.67 கோடி செலவில் கல் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தமிழக, கேரளாவை இணைக்கும் வகையில் போடி அருகே கொட்டகுடி ஊராட்சிக்கு உட்பட்ட முதுவாக்குடி மலைக் கிராமம் உள்ளது. இதோடு முட்டம், சென்ட்ரல், டாப் - ஸ்டேஷன் உள்ளிட்ட மலைக் கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். ஆயிரம் ஏக்கருக்கு மேல் காபி, மிளகு, ஏலம், இலவம் பயிரிடப்பட்டு உள்ளன. இப்பகுதி மக்கள் விளை பொருட்களை கொண்டு வரவும், மருத்துவ வசதி பெற போடிக்கு வர வேண்டும்.
குரங்கணியில் இருந்து சாம்பலாறு வரை மட்டுமே ரோடு உள்ளது. அதன் பின் முட்டம், முதுவாக்குடி, சென்ட்ரல், டாப் - ஸ்டேஷன் உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு செல்ல ரோடு வசதி இல்லை. கரடு, முரடாகவும், குண்டும், குழியுமாக உள்ள இப்பாதையில் விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு வர முடியாமல் தலைச் சுமையாகவும், கழுதைகள் மூலமாக கொண்டு வர சிரமம் அடைகின்றனர். நோயாளிகளை ் சிகிச்சை பெற ' டோலி' கட்டி தூக்கி வரும் நிலையில் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மலைக் கிராம மக்களின் சிரமங்களை தவிர்க்கவும், அவசரத்திற்கு டூவீலர், ஜீப்பில் செல்லும் வகையில் முதல் கட்டமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ. ஒரு கோடியே 67 லட்சம் செலவில் 3 கி.மீ., தூரம் 8 அடி அகலத்தில் கல்பாவுதல் பணி நடந்து வருகிறது.