/உள்ளூர் செய்திகள்/தேனி/ வருவாய்த்துறையினர் வேலை நிறுத்தம் அலுவலக பணிகள் பாதிப்பு வருவாய்த்துறையினர் வேலை நிறுத்தம் அலுவலக பணிகள் பாதிப்பு
வருவாய்த்துறையினர் வேலை நிறுத்தம் அலுவலக பணிகள் பாதிப்பு
வருவாய்த்துறையினர் வேலை நிறுத்தம் அலுவலக பணிகள் பாதிப்பு
வருவாய்த்துறையினர் வேலை நிறுத்தம் அலுவலக பணிகள் பாதிப்பு
ADDED : ஜூன் 26, 2025 01:52 AM

தேனி: ''வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். களப்பணிகளை மேற்கொள்ள அவகாசம் வழங்க வேண்டும்.'' என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ரோடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வளாகத்தில் இருந்து பங்களாமேடு வரை ஊர்வலமாக வந்தனர். வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். நில அளவையர் கூட்டமைப்பு சங்க நிர்வாகி வேல்முருகன், வீ.ஏ.ஓ., சங்கத் தலைவர் கவிதா உள்ளிட்டோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர். பல அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் தாலுகா அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகத்தில் சில பிரிவு அலுவலகங்கள் காலியாக காணப்பட்டன. அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டன. ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வந்த தற்காலிக ஆசிரியர்கள் காத்திருந்து திரும்பிச் சென்றனர்.