/உள்ளூர் செய்திகள்/தேனி/ பருவமழை துவங்கும் முன் சாக்கடைகள் துார்வார கோரிக்கை பருவமழை துவங்கும் முன் சாக்கடைகள் துார்வார கோரிக்கை
பருவமழை துவங்கும் முன் சாக்கடைகள் துார்வார கோரிக்கை
பருவமழை துவங்கும் முன் சாக்கடைகள் துார்வார கோரிக்கை
பருவமழை துவங்கும் முன் சாக்கடைகள் துார்வார கோரிக்கை
ADDED : செப் 22, 2025 03:36 AM

தேனி : ''மாவட்டத்தில் பருவ மழை துவங்கும் முன் சாக்கடைகளை துார்வார உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்தில் குடியிருப்புப் பகுதியில் உள்ள சாக்கடைகள் பெரும்பாலும் மணல் சேர்ந்து, பிளாஸ்டிக், குப்பை என துார்வாரப்படாமல் உள்ளது. மழை பெய்யும் போது சாக்கடையில் தண்ணீர் செல்ல முடியாமல் பல இடங்களில் ரோட்டில் சாக்கடை கழிவு நீருடன், மழைநீர் ஆறாக ஓடுகிறது.
சில இடங்களில் வழியின்றி குளம் போல் மழைநீர், சாக்கடை கழிவு நீருடன் தேங்குகின்றன. இந்த பிரச்னை தேனி நகர் பகுதியில் அதிகம் காணப்படுகிறது.நகர் பகுதியில் வெங்கலா கோயில் பகுதியில் இருந்து லேக் வியூ ரோடு செல்லும் சாக்கடை, பாரஸ்ட் ரோடு வழியாக ராஜவாய்க்கால் செல்லும் சாக்கடை, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள சாக்கடைகள் மணல் துார்ந்து கழிவு நீர் செல்ல வழியின்றிகாணப்படுகின்றன.
இதனால் மழை பெய்தால் நகரின் குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்கள் சிரமத்திற்குஆளாகுகின்றனர்.
தேனி அல்லிநகரம் நகராட்சிபகுதிகள் மட்டும் இன்றி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழைதுவங்குவதற்கு முன் சாக்கடைகளை துார்வாரவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.