/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேனியில் சென்னை ரயில் கூடுதலாக இரு நிமிடங்கள் நிறுத்த கோரிக்கை தேனியில் சென்னை ரயில் கூடுதலாக இரு நிமிடங்கள் நிறுத்த கோரிக்கை
தேனியில் சென்னை ரயில் கூடுதலாக இரு நிமிடங்கள் நிறுத்த கோரிக்கை
தேனியில் சென்னை ரயில் கூடுதலாக இரு நிமிடங்கள் நிறுத்த கோரிக்கை
தேனியில் சென்னை ரயில் கூடுதலாக இரு நிமிடங்கள் நிறுத்த கோரிக்கை
ADDED : மே 31, 2025 12:39 AM
தேனி: மாவட்டத்தில் இருந்து சென்னை செல்லும் சூப்பர் பாஸ்ட் ரயிலை தேனி ரயில்வே ஸ்டேஷனில் இரு நிமிடங்கள் கூடுதலாக நிறுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போடியில் இருந்து தேனி, மதுரை, திண்டுக்கல் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு ஞாயிறு, செவ்வாய், வியாழன் கிழமைகளில் சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் இயக்கப்படும் நாட்களில் தேனி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து குறைந்த பட்சம் 250க்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். ஆனால் பிளாட்பாரத்தில் எந்த இடத்திலும் பெட்டி எங்கு நிற்கும் என்பதற்கான 'கோச் டிஸ்பிளே' இல்லை.
தரையில் பெயிண்டால் குறித்துள்ளனர். இதனை முதியவர்கள், குழந்தைகளுடன் வருபவர்கள் கண்டறிய முடிவதில்லை. சிலர் அவசர கதியில் ஏதோ ஒரு பெட்டியில் ஏறி பயணம் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
தற்போது இந்த ரயில் தேனி ரயில்வே ஸ்டேஷனில் இரு நிமிடங்கள் மட்டும் நின்று புறப்படுகிறது. கூடுதலாக இரு நிமிடங்கள் நிறுத்த வேண்டும், கோச் டிஸ்பிளே வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.