Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ குமுளி மலைப்பாதையில் ஆபத்தான மரங்களை அகற்றுங்கள்: பருவமழை தீவிரமடைவதற்குள் நடவடிக்கை தேவை

குமுளி மலைப்பாதையில் ஆபத்தான மரங்களை அகற்றுங்கள்: பருவமழை தீவிரமடைவதற்குள் நடவடிக்கை தேவை

குமுளி மலைப்பாதையில் ஆபத்தான மரங்களை அகற்றுங்கள்: பருவமழை தீவிரமடைவதற்குள் நடவடிக்கை தேவை

குமுளி மலைப்பாதையில் ஆபத்தான மரங்களை அகற்றுங்கள்: பருவமழை தீவிரமடைவதற்குள் நடவடிக்கை தேவை

ADDED : ஜூன் 04, 2025 01:19 AM


Google News
Latest Tamil News
கூடலுார்: தென்மேற்கு பருவ மழை மேலும் தீவிரமடைவதற்கு முன் குமுளி மலைப்பாதையில் சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடத்தில் குமுளி மலைப்பாதையும் ஒன்றாகும். லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., தூர மலைப்பாதை பல ஆபத்தான வளைவுகளைக் கொண்டதாகும். அருகில் தேக்கடி இருப்பதால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். மேலும் சபரிமலை சீசனில் ஐயப்ப பக்தர்களுக்கு இப்பாதை அதிகம் பயன்படுகிறது.

2018ல் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் மலைப்பாதையில் மரங்கள் சாய்ந்தும், மண் சரிவு ஏற்பட்டும் ஒரு மாதத்திற்கு மேலாக இரு மாநிலங்கள் இடையே போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அதேபோல் 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் பெய்த கனமழையால் பல இடங்களில் ரோட்டின் குறுக்கே மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தின.

ஐந்து தினங்களுக்கு முன்பு குமுளி பஸ் ஸ்டாப்பில் ராட்சத மரங்கள் ரோட்டின் குறுக்கே சாய்ந்து லாரி கிளினர் பலியானார். மேலும் லாரி, பஸ், கார் சேதமடைந்தது 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மலைப்பாதையில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழும் அபாயமும், மண் சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளது.

தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதால் முன்கூட்டியே ஆபத்தான மரங்களை கண்டறிந்து அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மண்சரிவு ஏற்படும் நிலையில் உள்ள பகுதிகளில் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us