/உள்ளூர் செய்திகள்/தேனி/கேரள எல்லையில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைப்பதில் தயக்கம்; கடத்தலை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்கேரள எல்லையில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைப்பதில் தயக்கம்; கடத்தலை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கேரள எல்லையில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைப்பதில் தயக்கம்; கடத்தலை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கேரள எல்லையில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைப்பதில் தயக்கம்; கடத்தலை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கேரள எல்லையில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைப்பதில் தயக்கம்; கடத்தலை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : செப் 17, 2025 03:21 AM

தேனி மாவட்டம் கேரள எல்லையில் அமைந்துள்ளது. இம் மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு செல்ல குமுளி, கம்பமெட்டு, போடி மெட்டு ஆகிய வழித்தடங்கள் உள்ளது. இதில் குமுளி மலைப்பாதை வழியாக வாகனப் போக்குவரத்து அதிகம். அருகில் தேக்கடி இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் இவ்வழியாக செல்கின்றனர். சபரிமலைஉற்ஸவ நேரங்களில் ஐயப்ப பக்தர்கள் வாகனங்களும் அதிகமாக இவ்வழியாக செல்லும்.
குமுளியில் உள்ள கேரளப் பகுதியில் அனைத்து துறையைச் சேர்ந்த சோதனைச் சாவடி ஒரே இடத்தில் உள்ளது. அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கேரளாவிற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த தமிழகப் பகுதியான குமுளி மலைப் பாதையில் வனத்துறை, போலீஸ் சோதனை சாவடி மட்டுமே உள்ளது. மலைப்பாதையில் இருந்த வருவாய்துறை சோதனை சாவடி சில ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் அமைக்க நடவடிக்கை இல்லை. லோயர்கேம்பில் இயங்கி வந்த ஆர்.டி.ஓ., சோதனைச் சாவடி 15 ஆண்டுகளுக்கு முன்பு தேனி பழனிசெட்டிபட்டிக்கு மாற்றப்பட்டது. எல்லைப் பகுதியில் இருந்து 50 கி.மீ., தூரத்தில் உள்ளதால் பல்வேறு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் பெர்மிட் பெறுவதில் அடிக்கடி குளறுபடி ஏற்படுகிறது. மேலும் மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி, கஞ்சா கடத்தவதை முழுமையாக தடுக்க முடிவதில்லை. அதனால் எல்லைப் பகுதியான குமுளி லோயர்கேம்பில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கடத்தலை தடுப்பதற்காக அவ்வப்போது இரு மாநில அதிகாரிகள் கம்பத்தில் கூட்டுக் குழு கூட்டம் பெயரளவில் நடத்தி விட்டு செல்கின்றனர். ஆனால் முழுமையான சோதனை நடத்துவதில்லை. லோயர்கேம்பில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைக்க 2023ல் வட்டாரப் போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் தொடர் நடவடிக்கை எடுக்காமல் தயக்கம் காட்டி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கடத்தலை முழுமையாக தடுக்க எல்லைப் பகுதியான லோயர்கேம்பில் அனைத்து துறை சார்பில் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.