ADDED : செப் 12, 2025 04:44 AM
தேனி: தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் மாணவிகளுக்கான அண்ணா பல்கலை மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி நடந்தது.
போட்டியை தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை விளையாட்டுத்துறை செயலாளர் கோபி துவக்கி வைத்தார். போட்டியில் திண்டுக்கல், தேனி, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கல்லுாரி அணிகள் பங்கேற்றன. திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி முதலிடம், தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி 2ம் இடம், திண்டுக்கல் எஸ்.பி.எம்., பொறியியல் கல்லுாரி 3ம் இடம் வென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு உறவின்முறை தலைவர் தர்மராஜன், துணைத் தலைவர் ஜீவகன், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமசந்திரன், கல்லுாரி செயலாளர் சோமசுந்தரம், இணைச்செயலாளர் சுப்ரமணி உள்ளிட்டோர் பரிசுகள் வழங்கி பாரட்டினர்.