/உள்ளூர் செய்திகள்/தேனி/ பெரியாறு அணையில் வரலாறு காணாத மழை நீர்வரத்து 71 ஆயிரம் கன அடியை தாண்டியது - கேரளாவுக்கு 7163 கன அடி வெளியேற்றம் பெரியாறு அணையில் வரலாறு காணாத மழை நீர்வரத்து 71 ஆயிரம் கன அடியை தாண்டியது - கேரளாவுக்கு 7163 கன அடி வெளியேற்றம்
பெரியாறு அணையில் வரலாறு காணாத மழை நீர்வரத்து 71 ஆயிரம் கன அடியை தாண்டியது - கேரளாவுக்கு 7163 கன அடி வெளியேற்றம்
பெரியாறு அணையில் வரலாறு காணாத மழை நீர்வரத்து 71 ஆயிரம் கன அடியை தாண்டியது - கேரளாவுக்கு 7163 கன அடி வெளியேற்றம்
பெரியாறு அணையில் வரலாறு காணாத மழை நீர்வரத்து 71 ஆயிரம் கன அடியை தாண்டியது - கேரளாவுக்கு 7163 கன அடி வெளியேற்றம்

அதிகாரிகள் முகாம்
கனமழையைத் தொடர்ந்து நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருவதால் தமிழக நீர்வளத்துறை செயற்பொறியாளர் செல்வம், உதவி செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர்கள் ராஜகோபால், மகேந்திரன், பாலசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் அணைப்பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் இரவில் கனமழை பெய்த போதிலும் நேற்று பகலில் மழை சற்று குறைந்தது.
தடுப்பணை உடைந்தது
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் லோயர்கேம்பில் துவங்கி வைகை அணை வரையுள்ள முல்லைப் பெரியாற்றில் ஓடுகிறது. இதன் மூலம் லோயர்கேம்ப் குருவனத்துப்பாலம், காஞ்சிமரத்துறை, வெட்டுக்காடு, குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய 4 இடங்களில் மினி பவர் ஹவுஸ் அமைத்து மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக தண்ணீரை தேக்கும் வகையில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் குள்ளப்பகவுண்டன்பட்டியில் உள்ள மினி பவர் ஹவுசின் தடுப்பணையின் தெற்குப் பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. ஆற்றில் தேங்கியிருந்த தண்ணீர் அதிரடியாக வெளியேறியது. இரவுபணியில் இருந்த அலுவலர்கள் மேல் பகுதிக்கு சென்று உயிர் தப்பினர். அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் டிராக்டர், மின்வாரிய அலுவலர்களின் 2 டூவீலர்கள் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது.


