/உள்ளூர் செய்திகள்/தேனி/ முல்லைப் பெரியாறு அணையில் குறைந்தது மழைப்பொழிவு முல்லைப் பெரியாறு அணையில் குறைந்தது மழைப்பொழிவு
முல்லைப் பெரியாறு அணையில் குறைந்தது மழைப்பொழிவு
முல்லைப் பெரியாறு அணையில் குறைந்தது மழைப்பொழிவு
முல்லைப் பெரியாறு அணையில் குறைந்தது மழைப்பொழிவு
ADDED : ஜூன் 03, 2025 06:56 AM
கூடலுார் : முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த கனமழை குறைந்தது.
தென்மேற்கு பருவமழை ஜூன் 23ல் துவங்கியவுடன் முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை துவங்கியது. தொடர்ந்து ஒரு வாரம் பெய்த கனமழையால் 114.45 அடியாக இருந்த நீர்மட்டம் 16 அடி வரை உயர்ந்து நேற்று 130.55 அடியை எட்டியது. (மொத்த உயரம் 152 அடி). அதிக பட்சமாக மே 29ல் பெரியாறில் 112.4 மி.மீ., மழை பெய்தது. இந்நிலையில் தற்போது மழை குறைந்து வெப்பம் நிலவுகிறது. தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்காக 1644 கன அடி திறக்கப்பட்டுள்ளது.
நீர்மட்டம் 130 அடியை கடந்துள்ளதால் முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை.