/உள்ளூர் செய்திகள்/தேனி/ இடுக்கி மாவட்டத்தில் தொடர்கிறது மழை: கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை * கலெக்டர் விக்னேஸ்வரி அறிவிப்பு இடுக்கி மாவட்டத்தில் தொடர்கிறது மழை: கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை * கலெக்டர் விக்னேஸ்வரி அறிவிப்பு
இடுக்கி மாவட்டத்தில் தொடர்கிறது மழை: கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை * கலெக்டர் விக்னேஸ்வரி அறிவிப்பு
இடுக்கி மாவட்டத்தில் தொடர்கிறது மழை: கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை * கலெக்டர் விக்னேஸ்வரி அறிவிப்பு
இடுக்கி மாவட்டத்தில் தொடர்கிறது மழை: கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை * கலெக்டர் விக்னேஸ்வரி அறிவிப்பு
ADDED : ஜூன் 16, 2025 05:30 AM

மூணாறு: ''இடுக்கி மாவட்டத்தில் பலத்த மழை தொடர்வதால் தேசிய நெடுஞ்சாலையில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் பள்ளி, கல்லுாரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று (ஜூன் 16ல்) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் விக்னேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இம்மாவட்டத்தில் ஜூன் 11 மாலை முதல் பருவ மழை தீவிரமடைந்து பலத்த மழை பெய்கிறது. கடந்த 2 நாட்களாக கன மழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்ட நிலையில், இதே 'அலர்ட்' இன்றும், நாளையும் விடுக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் நேற்று தொடுபுழா உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை சற்று குறைந்த போதும் மலையோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக தேவிகுளம் தாலுகாவில் நேற்று முன்தினம் மாலை முதல் மழை அதிகரித்ததால் பல பகுதிகளில் மண் மற்றும் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டன. குறிப்பாக கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு- கொச்சி இடையே ரோடு அகலப்படுத்தும் பணி நடக்கிறது. அதனால் ரோட்டோரங்களில் மண் எடுக்கப்பட்டதால் ஏராளமான வீடுகள் ஆபத்தான நிலையில் உள்ளன.
கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அடிமாலி அருகே வாளரா பகுதியில் கூட்டமாக மூங்கில் மரங்கள் ரோட்டில் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கட்டப்பனை அருகே கொச்சுதோவாளையில் பாறை உருண்டு விழுந்து ஜோஸ் என்பவரது வீடும், வீட்டு உபகரணங்களும் சேதமடைந்தன.
இம்மாவட்டத்தில் நாளை வரை கன மழை தொடரும் என்பதால் நீர்நிலை, சாகச சுற்றுலாவுக்கு விடுக்கப்பட்ட தடை உத்தரவு நாளை வரை தொடர்கிறது. அதேபோல் கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு கேப் ரோடு வழியாக இரவு நேர போக்குவரத்தும், அங்கு பகலில் வாகனங்கள் நிறுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கலெக்டர் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.