/உள்ளூர் செய்திகள்/தேனி/ துரத்தும் தெரு நாய்களால் பொது மக்கள் அச்சம் துரத்தும் தெரு நாய்களால் பொது மக்கள் அச்சம்
துரத்தும் தெரு நாய்களால் பொது மக்கள் அச்சம்
துரத்தும் தெரு நாய்களால் பொது மக்கள் அச்சம்
துரத்தும் தெரு நாய்களால் பொது மக்கள் அச்சம்
ADDED : மே 26, 2025 02:47 AM
போடி: போடி பஸ் ஸ்டாண்டில் தஞ்சம் அடைந்து உள்ள தெரு நாய்கள் பயணிகளை துரத்துவதோடு, கடித்தும் வருவதால் மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
போடி பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை வளாகம், குலாலர் பாளையம், தென்றல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தோல் உரிந்த நோயால் பாதிக்கப்பட்ட தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. வெளியூர் செல்வதற்காக பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணிகளை நாய்கள் துரத்துவதோடு, கடித்தும் வருகிறது. நாய் கடியால் 'ரேபிஸ்' நோய்க்கு ஆளாக வேண்டும் என்பதால் மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். நோயால் பாதித்த நாய்களால் மக்களுக்கு தொற்று நோய் பரவும் நிலை உள்ளது. தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை இல்லாததால் நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் தெரு நாய்கள், கழுதை, மாடுகளை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.