ADDED : ஜூன் 03, 2025 12:52 AM

தேனி: தேனி கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் ஹிந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத் தலைவர் குரு ஐயப்பன் தலைமையில் கட்சியினர், பொது மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். ஒரு பெண் அம்மன் வேடமிட்டு பங்கேற்றார்.
தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ''தேனி பெரியகுளம் ரோட்டில் ஊஞ்சாம்பட்டியில் இரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோயில் உள்ளது.
இந்த கோயிலில் தனிநபர் ஒருவர் ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் செயல்படுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.'', எனக் கூறினர்.