ADDED : செப் 08, 2025 06:21 AM
பெரியகுளம் : பெரியகுளம் அருகே கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் ஆவணி மாத பவுர்ணமி பூஜையை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்புக்குழு ஆலோசகர் ஜெயபிரதீப், தலைவர் நாராயணன், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி செய்திருந்தனர். வர்த்தக பிரமுகர் சவுந்திரபாண்டியன் அன்னதானம் வழங்கினார்.-