/உள்ளூர் செய்திகள்/தேனி/ முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 02, 2025 07:15 AM

தேனி : தேனி சி.இ.ஓ., அலுவலகம் முன் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், 'பள்ளிக்கல்வித்துறையில் நடப்பாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு க்கான அட்டவணை வெளியிட வேண்டும்.
நுாறு சதவீத தேர்ச்சி குறைவிற்கு ஆசிரியர்கள் மட்டுமே காரணம் எனும் நடவடிக்கைய உடனடியாக நிறுத்த வேண்டும்,' உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பெத்தனகுமார் தலைமை வகித்தார்.
மாநில துணைத்தலைவர் முருக பாரதி முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் அன்பழகன், நிர்வாகிகள் செல்வம், பொட்டியம்மாள், லதா, பரமன், ஜனனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.