/உள்ளூர் செய்திகள்/தேனி/ கம்பமெட்டில் கொட்டிய கேரள குப்பை மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு தினமலர் செய்தி எதிரொலி கம்பமெட்டில் கொட்டிய கேரள குப்பை மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு தினமலர் செய்தி எதிரொலி
கம்பமெட்டில் கொட்டிய கேரள குப்பை மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு தினமலர் செய்தி எதிரொலி
கம்பமெட்டில் கொட்டிய கேரள குப்பை மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு தினமலர் செய்தி எதிரொலி
கம்பமெட்டில் கொட்டிய கேரள குப்பை மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு தினமலர் செய்தி எதிரொலி
ADDED : செப் 17, 2025 07:45 AM

கம்பம் : கம்பமெட்டு மலையடிவாரத்தில் கொட்டிய கேரள குப்பை குவியல்களை சுற்றுப் புறச்சூழல் பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.
கம்பமெட்டு மலையடிவாரத்தில் சில நாட்களுக்கு முன்பு தனியார் பட்டா காட்டில் கேரளாவில் இருந்து வந்த வாகனங்களில் மூடை மூடையாக குப்பையை கொட்டி சென்றனர். அதில் ஒரு பகுதியை தீ வைத்து எரித்து சென்றனர். இது குறித்து தொடர்பாக போலீசில் புகார் செய்தும் வழக்கு ஏதும் பதியவில்லை. தினமலர் நாளிதழில் இது குறித்து செய்தி வெளியானது. இச் செய்தி எதிரொலியாக நேற்று மாலை மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் சுகுமார், மதுரை சுற்றுச் சூழல் பறக்கும் படை பொறியாளர் பத்மஸ்ரீ ஆகியோர் தலைமையில் மருத்துவக் குழுவினர் மருத்துவக் கழிவுகள் உள்ளதா என ஆய்வு செய்தனர். அதில் மருத்துவக் கழிவுகள் இல்லை என உறுதி செய்தனர்.
குப்பை கொட்டப்பட்ட பகுதி புதுப்பட்டி பேரூராட்சிக்குட்பட்டது என்பதால், பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அகற்ற வந்தனர். அப்போது தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் குப்பை கொட்டியவர்களை கைது செய்யுங்கள். அது வரை குப்பை அகற்ற கூடாது என கூறி மறியல் செய்தனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.
சம்பவ இடத்தில் சுற்றுசூழல் மாவட்ட பொறியாளர் சுகுமார் கூறுகையில், ' கம்பமெட்டு பகுதியில் கொட்டிய குப்பையில் மருத்துவக் கழிவுகள் இல்லை. இனி குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். போலீசாருக்கும் சில ஆலோசனைகள் கூறியுள்ளோம்,' என்றார்.