/உள்ளூர் செய்திகள்/தேனி/ குமுளியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை குமுளியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை
குமுளியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை
குமுளியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை
குமுளியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை
ADDED : செப் 18, 2025 05:47 AM
கூடலுார் : குமுளியில் கேரளாவில் இருந்து தமிழகப் பகுதிக்கு வரும் வாகனங்களை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கேரளாவில் இருந்து கழிவுகளை தமிழகப் பகுதியில் வந்து கொட்டுவது தொடர்ந்துள்ளது. கேரளாவில் பொது இடங்களில் கழிவுகளை கொட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் எல்லையோரத்தில் கேரளக் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டு வருகிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு கம்பமெட்டு வழியாக வந்து கம்பத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கேரள கழிவுகள் கொட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு கழிவுகளை கொட்டியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று தேனி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் கவிதா, மதுரை மாவட்ட உதவி பொறியாளர் காருண்யா ஆகியோர் குமுளியில் உள்ள வனத்துறை மற்றும் போலீஸ் சோதனை சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் தமிழகப் பகுதிக்கு வரும் வாகனங்களில் செய்யப்படும் சோதனைகள் குறித்து ஆய்வு நடத்தினர். மேலும் தமிழகப் பகுதிக்கு வரும் அனைத்து வாகனங்களிலும் சோதனை நடத்தி அனுமதிக்கப்பட்டனர்.
இப்பணிகளை தொடர்ந்து நடத்த சோதனை சாவடி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.