ADDED : ஜூன் 16, 2025 12:24 AM
டூவீலர்கள் மாயம்
தேனி: காமாட்சிபுரம் சதீஸ்குமார் 31. பூமலைக்குண்டுவில் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிகிறார். உறவினருடன் டூவீலரில் நாகலாபுரத்தில் உள்ள தனியார் கிளப்பிற்கு சென்றார். அருகே டூவீலரை நிறுத்தியிருந்தார். திரும்பி வந்த போது டூவீலரை காணவில்லை. இவரது புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
தேனி: ஜி.கல்லுப்பட்டி அரசமரத்தெரு அலெக்ஸ்பாண்டி 25. குச்சனுாரில் குடும்பத்துடன் தங்கி விவசாய வேலை செய்து வந்தார். இந்நிலையில் ஜி.கல்லுப்பட்டி சென்றவர் பேட்டை அருகே டூவீலரை நிறுத்தினார். டீக்கடைக்கு சென்று திரும்பினார். அப்போது டூவீலர் காணாமல் போனது. அவரது புகாரில் தேவதானப்பட்டி போலீசார் டூவீலரை தேடி வருகின்றனர்.