Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ போலீஸ் செய்தி....

போலீஸ் செய்தி....

போலீஸ் செய்தி....

போலீஸ் செய்தி....

ADDED : ஜூன் 12, 2025 02:45 AM


Google News
அடிதடி தகராறு: இருவர் மீது வழக்கு

போடி: பெருமாள் கவுண்டன்பட்டி பேச்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செல்வம் 52. இவரது கொழுந்தியா வெண்ணிலாவிற்கு சொந்தமான காலி இடத்தில் ஆட்டு கொட்டம் அமைத்து ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். தேனி அருகே வாழையாத்துப்பட்டியை சேர்ந்த ஆனந்தன், விஜய் இருவரும் சேர்ந்து செல்வம் ஆட்டுக் கொட்டம் அமைந்துள்ள இடம் தங்களுக்கு சொந்தமானது என கூறி அத்துமீறி நுழைந்துள்ளனர். செல்வத்தை தகாத வார்த்தையால் பேசி, கல்லால் அடித்து காயப்படுத்தினர். செல்வம் புகாரியில் போடி தாலுகா போலீசார் ஆனந்தன், விஜய் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கல்லுாரி மாணவி மாயம்

கடமலைக்குண்டு: இவ்வூரை சேர்ந்தவர் பழனிவேல்சாமி 50, இவரது மகள் அபர்ணா 21, தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இரு நாட்களுக்கு முன் அபர்ணாவை அவரது தம்பியுடன் வீட்டில் இருக்க கூறிவிட்டு பழனிவேல்சாமி மனைவியுடன் தோட்ட வேலைக்கு சென்றார். வீட்டில் இருந்த அபர்ணா யாரிடமும் சொல்லாமல் வெளியில் சென்றார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. பழனிவேல்சாமி புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

சிறுமிக்கு திருமணம்: 5 பேர் மீது போக்சோ

கடமலைக்குண்டு: தர்மராஜபுரத்தில் குழந்தை திருமணம் நடந்திருப்பதாக கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் மலர்கொடிக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவர் விசாரணை மேற்கொண்டதில் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கடந்தாண்டு ஏப்ரலில் தர்மராஜபுரத்தில் திருமணம் முடிந்ததும், தற்போது சிறுமி கர்ப்பமாக இருப்பதும் உறுதியானது. இதனைத் தொடர்ந்து சிறுமியை திருமணம் முடித்த முருக்கோடையைச் சேர்ந்த சரத்குமார், அவரது உறவினர்கள் தமிழன் ,சீதா, தங்கப்பாண்டி, யோகாம்பாள் ஆகியோர் மீது கடமலைக்குண்டு போலீசார் போச்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விவசாயி மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு

பெரியகுளம்: லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் விவசாயி சிவாஜி 66. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த குமார் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. தோட்டத்திற்கு டூவீலரில் சென்று கொண்டிருந்த சிவாஜியை, குமார் தூண்டுதலில் சுந்தர்ராஜன், இவரது மகன் நவீன், சிவமுருகன் உட்பட 5 பேர், வழிமறித்து கம்பி மற்றும் கையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். தென்கரை எஸ்.ஐ., செந்தில்குமார் விசாரணை செய்து வருகிறார்.

புகையிலை விற்ற மூதாட்டி கைது

தேனி: அல்லிநகரம் எஸ்.ஐ., கண்ணன் தலைமையிலான போலீசார் பொம்மையக் கவுண்டன்பட்டி பாலன் நகர் 2வது தெருவில் ரோந்து சென்றனர். அங்கு அழகுலட்சுமி60, பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.584 மதிப்புள்ள 373 கிராம் 28 புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

தற்கொலை

போடி: புதூர் வலசத்துறை ரோட்டில் வசித்தவர் கார்த்திக் 30. இவரது மனைவி அனிதா. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கார்த்திக்ற்கு மது பழக்கம் உள்ளது. இதனால் 20 நாட்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி அனிதா கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். மது பழக்கத்திற்கு அடிமையான கார்த்திக் நேற்று முன்தினம் விஷம் குடித்துள்ளார். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். கார்த்திக் தாயார் முருகேஸ்வரி புகாரில் போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us