ADDED : மார் 25, 2025 05:01 AM
விரக்தியில் தந்தை தற்கொலை
தேனி: பாண்டியன் ஆயில் மில் தெரு வனராஜ் 44. கொத்தனார். இவரது மகன் சஞ்சய்குமார் படித்துவிட்டு, வேலைக்கும் செல்லாமல் இருந்தார். இதனால் வனராஜ் மகனின் எதிர்காலம் கருதிகவலை அடைந்தார். விரக்தியில் விஷம் குடித்துவிட்டு, மகளுக்கு அலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். தேனிஅரசு மருத்துவக்கல்லுாரியில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். தேனி எஸ்.ஐ.,மலைச்சாமி விசாரிக்கிறார்.
டிரைலர் மீது கார் மோதி விபத்து
தேனி: டொம்புச்சேரி பாலம்மன் கோயில் தெரு சிவராமசந்திரன் 38. முறுக்கு வியாபாரி. இவரது காரில் மனைவி மீனாவை ஏற்றிக்கொண்டு தேனி நோக்கி சென்றார்.உப்புக்கோட்டை தேனி மெயின் ரோட்டில்உள்ள சடையால்பட்டி விலக்கு அருகில் சென்ற போது, மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தைசேர்ந்த சதாசிவம் ஓட்டி வந்த கரும்பு ஏற்றிய பதிவு எண் இல்லாத கனரக வாகன டிரைலர் ரோட்டின்நின்றிருந்தது.
இதில் பின்புறமாக ரிப்ளக்டர் விளக்கு இன்றி இருந்ததால் கார் மோதி விபத்து நடந்தது. இதில்காரில் பயணித்த சிவராமச்சந்திரன் மனைவி மீனா பலத்த காயங்கள் ஏற்பட்டன.
தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
முதியவர் மீது டூவீலர் மோதி பலி
தேனி: பொம்மையகவுண்டன்பட்டி பள்ளி ஓடைத்தெரு பால்பாண்டி 43. இவரது தந்தை வேலுச்சாமி 60. இவர் அல்லிநகரம் இந்திராகாலனியில் வசிக்கும் தனது மகளை பார்த்து வருவதாக கூறி சென்றார்,தேனி பெரியகுளம் மெயின் ரோடு தனியார் எடை மேடை அருகே ரோட்டை கடக்கும் போதுபழனிசெட்டிபட்டி மூவேந்திரன் தெரு சண்முகபிரியன் ஓட்டிவந்த டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் வேலுச்சாமிக்கு காயங்கள் ஏற்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.