ADDED : அக் 08, 2025 07:23 AM
தேனி : தேனி டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.எஸ்.பி., முத்துக்குமாரிடம் பா.ஜ., வர்த்தகப் பிரிவு மாவட்டத் தலைவர் பெரியாமி தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர்.
மனுவில், 'பண்டிகை காலங்களில் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலால் பொது மக்கள், வர்த்தகர்கள் சிரமப்படுகின்றனர். இதனை தவிர்க்க போடி கம்பத்தில் இருந்து வரும் வாகனங்களை நேருசிலை வழியாகவும், மதுரை ரோட்டில் இருந்து கம்பம், போடி செல்லும் வாகனங்கள் பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.


