/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி மனு தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஆதரவு ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி மனு தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஆதரவு
ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி மனு தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஆதரவு
ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி மனு தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஆதரவு
ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி மனு தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஆதரவு
ADDED : ஜூலை 04, 2025 03:38 AM

தேனி: ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் சந்திரலேகா (தி.மு.க.) மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கோரி தி.மு.க., அ.தி.மு.க., உள்பட 15 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இப் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 5 வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சந்திரகலா பேரூராட்சி தலைவராக உள்ளார்.
இவர்மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் நிறைவேற்ற கோரி தி.மு.க., அதி.மு.க., கம்யூ., சுயேட்சை கவுன்சிலர்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.அவர்கள் மனுவில் கூறியிருப்பதாவது: ஆண்டிபட்டி பேரூராட்சி வார்டுகளில் அடிப்படை வசதிகள் தொடர்பாக கவுன்சிலர்கள் கூறும் கோரிக்கைகளை தீர்மானத்தில் சேர்க்க பேரூராட்சி தலைவர் மறுக்கிறார். கவுன்சிலர்களுடன் விரோத போக்குடனும், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகிறார். தலைவரின் கணவர் அதிகாரம் செலுத்துவது, அலுவலக பணிகளை தடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார். இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர்.
இந் நடவடிக்கையால் கவுன்சிலர்களுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இம் மனுவை விசாரித்து தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உத்தரவிட வேண்டும். இதே போல் 2023ல் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த போது தவறு செய்யமாட்டேன் என கூறியதால், அதனை நிறைவேற்ற வில்லை என கோரியுள்ளனர்.
கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க துணைத்தலைவர் ஜோதி உட்பட 8 பெண் கவுன்சிலர்கள், ஒரு ஆண் கவுன்சிலர் வந்திருந்தனர். மனுவில் அ.தி.மு.க., தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூ., இந்திய கம்யூ., சுயேட்சை கவுன்சிலர்கள் உட்பட 15 பேர் கையெழுத்திட்டிருந்தனர்.