/உள்ளூர் செய்திகள்/தேனி/ காத்திருப்பு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க விண்ணப்பித்தோர் சொந்த வீடுகளை புறம்போக்கு பதிவேற்றதால் மக்கள் தவிப்பு காத்திருப்பு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க விண்ணப்பித்தோர் சொந்த வீடுகளை புறம்போக்கு பதிவேற்றதால் மக்கள் தவிப்பு
காத்திருப்பு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க விண்ணப்பித்தோர் சொந்த வீடுகளை புறம்போக்கு பதிவேற்றதால் மக்கள் தவிப்பு
காத்திருப்பு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க விண்ணப்பித்தோர் சொந்த வீடுகளை புறம்போக்கு பதிவேற்றதால் மக்கள் தவிப்பு
காத்திருப்பு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க விண்ணப்பித்தோர் சொந்த வீடுகளை புறம்போக்கு பதிவேற்றதால் மக்கள் தவிப்பு
ADDED : ஜூன் 10, 2025 01:59 AM

தேனி: 60 ஆண்டுகள் குடியிருந்த வீட்டை சர்கார் புறம்போக்கு என வருவாய் துறையினர் கம்யூட்டரில் தவறாக பதிவேற்றம் செய்ததால் அதனை வகை மாற்றம் செய்து பட்டா வழங்க கோரி பல ஆண்டுகளாக பொதுமக்கள் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது.
கடந்த 1985ல் மாவட்டங்களில் நத்தம் புறம்போக்கு நிலங்கள் குறித்து கணக்கெடுப்பு துவங்கியது. இதில் தனியார் வசம் இருந்த நிலங்களின் விபரம் சேகரிக்கப்பட்டு அவற்றின் எல்லைகளும் வரையறுக்கப்பட்டன. இதன் அடிப்படையில் கிராம நத்தம் நிலங்களுக்கு பட்டா வழங்கும் பணி துவங்கின. இதில் 2018 முதல் ஆவணங்களை கம்ப்யூட்டரில் பதிவேற்றும் பணி துவங்கின. இதில் வகை மாற்றம் குறித்து தெளிவான புரிதல் இன்றி 40 முதல் 60 ஆண்டுகள் வசித்து வரும் வீட்டுமனைகளுக்கு சர்க்கார் புறம்போக்கு நிலம் என தவறாக குறிப்பிட்டு பதிவேற்றம் செய்துள்ளர். இந்நிலையில் வருவாய் துறை, நில அளவை செட்டில்மென்ட் துறை 2023 மே 4ல் அரசாணை பிறப்பித்தது. அதில் தனியார் பெயரில் பட்டாக்கள் இனி ரயத்துவாரி என்றும், பட்டா வழங்கப்படாமல் உள்ள அனைத்து நத்தம் நிலங்களும் சர்க்கார் நிலம் என்று வகைப்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. பட்டா இல்லாத இடங்களுக்கு பரிவர்த்தனைகள் நிறுத்த அரசு உத்தரவிட்டது. வருவாய்த்துறையின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பட்டா இன்றி கம்பத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் 6400 பேர் சொத்துக்களை வாங்க, விற்க முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக இந்நிலங்களுக்கு வகை மாற்றம் செய்யும் பணிகளை முடித்த செட்டில்மென்ட் தாசில்தார், அதனை தாசில்தார் அலுவலகம் மூலம் மாவட்ட நில அளவைத்துறையின் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தும், பட்டா வழங்கப்படாமல் உள்ளனர். வகை மாற்றம் செய்து பட்டா கோரிய விண்ணப்பத்தாரர்கள் தவித்து வருகின்றனர். இதே நிலை போடி, பெரியகுளம் தாலுகாக்களிலும் தொடர்கிறது. இதனை கலெக்டர், டி.ஆர்.ஓ., நேரடியாக ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும் பாதிக்கப்பட்டோர் கோரி வருகின்றனர்.
பாக்ஸ் மேட்டர்:
கலெக்டர் தீர்வு காண வேண்டும்.
டாக்டர் வி.ராதாகிருஷ்ணன், கம்பம் : கம்பத்தில் இப் பிரச்னையில் பாதிக்கப்பட்ட 6400 பேரில் மக்கள் பிரதிநிதி ஒருவரும் நிலம் வகைமாற்றம் செய்யாமல் பட்டா பெற முடியாமல் உள்ளார். இதில் குடும்பத்தினரின் பெயர் உள்ள பட்டாவில் சர்க்கார் நிலம் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் அரசாணையின் படி பரிவர்த்தனை செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். இதற்கு தீர்வு காண கலெக்டர் உத்தரவிட வேண்டும்., என்றார்.