Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ மலைப்பாதையில் அதிவேக ஜீப்களால் மக்கள் அச்சம்

மலைப்பாதையில் அதிவேக ஜீப்களால் மக்கள் அச்சம்

மலைப்பாதையில் அதிவேக ஜீப்களால் மக்கள் அச்சம்

மலைப்பாதையில் அதிவேக ஜீப்களால் மக்கள் அச்சம்

ADDED : செப் 15, 2025 03:58 AM


Google News
போடி : போடிமெட்டு மலைப் பாதையில் அதிக அளவில் கூலித் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வேகமாக வரும் கேரளா ஜீப், வேன் வாகன ஓட்டிகளால் மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

தேனியில் இருந்து மூணாறு செல்லும் தமிழக, கேரளாவை இணைக்கும் வழித்தடத்தில் அமைந்து உள்ளது போடிமெட்டு.

போடி அதனை சுற்றி உள்ள கிராம பகுதியில் இருந்து கேரளா பகுதியில் உள்ள ஏலத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு கூலித் தொழிலாளர்களை தினம் தோறும் காலை 7:00 மணிக்கு ஏற்றிக் கொண்டு 30 க்கும் மேற்பட்ட ஜீப்கள், வேன்கள் மூலம் கேரளா செல்கின்றனர். அங்கு மதியம் 3:00 மணிக்கு ஒரே நேரத்தில் தோட்ட வேலைகள் முடிகிறது.

அங்கு இருந்து கூலித் தொழிலாளர்களை ஜீப், வேன்களில் ஏற்றிக் கொண்டு போடி, தர்மத்துப்பட்டி, சில்லமரத்துப்பட்டி, ராசிங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இறக்கி விடுவதற்கு போடிமெட்டு மலைப் பாதையில் போட்டி, போட்டு வாகனங்களை அதி வேகமாக இயக்கி வருகின்றனர். சிலர் 'பெர்மிட்' இன்றி மது போதையில் வாகனத்தை ஓட்டி வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுவதோடு, உயிர் பலியாகும் நிலை ஏற்படுகிறது. போடியில் பள்ளி விடும் நேரங்களில் கேரளா ஜீப்புகளை அதிவேகமாக ஓட்டி வருவதால் மாணவர்கள் மட்டும் இன்றி பொது மக்களும் அச்சம் அடைந்து வருகின்றனர். பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதை தடுக்கவும், 'பெர்மிட்' இன்றி வாகனம் ஓட்டுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us