ADDED : ஜூன் 14, 2025 05:50 AM

கூடலுார்: கூடலுார் அண்ணாநகர் பேச்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் 65. நேற்று காலை டூவீலரில் புறவழிச்சாலையில் சென்ற போது சின்னமனுாரில் இருந்து லோயர்கேம்ப் நோக்கிச் சென்ற மினி லாரி மோதியது. சம்பவ இடத்திலேயே ராஜேந்திரன் பலியானார்.
சின்னமனுாரைச் சேர்ந்த டிரைவர் நந்தகுமாரை கூடலுார் தெற்கு போலீசார் கைது செய்தனர்.