/உள்ளூர் செய்திகள்/தேனி/ எழுத்து பயிற்சி வழங்கும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் எழுத்து பயிற்சி வழங்கும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள்
எழுத்து பயிற்சி வழங்கும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள்
எழுத்து பயிற்சி வழங்கும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள்
எழுத்து பயிற்சி வழங்கும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள்
ADDED : செப் 30, 2025 05:13 AM

தேனி: மாவட்டத்தில் என்.எஸ்.எஸ்., முகாமில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் அப்பகுதியில் பாரத எழுத்தறிவு திட்டத்தில் கற்போருக்கு எழுத்து பயிற்சி அளிக்கின்றனர்.
பாரத எழுத்தறிவு திட்டத்தில் பள்ளிசார, வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் 15 வயதிற்கு மேற்பட்ட எழுத்தறிவு பெறாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கப்பட்டு வருகிறது.பள்ளி காலாண்டு விடுமுறையில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் என்.எஸ்.எஸ்., முகாம்களில் பங்கேற்று உள்ளனர். இவர்களில் சில மாணவர்கள் மூலம் எழுத்தறிவு திட்டத்தில் கற்போரை கண்டறிந்து அவர்களுக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
கல்வித்துறையினர் கூறுகையில்,' போடியில் பங்கஜம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தர்மத்துபட்டி கிராமத்தில் எழுத்தறிவு பயிற்சி வழங்கி வருகின்றனர். இது தவிர திம்மரசநாயக்கனுார், கன்னியப்பிள்ளைபட்டி, மேலசிந்தலைச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் நடைபெறும் என்.எஸ்.எஸ்., முகாம்களிலும் மாணவர்கள் மூலம் எழுத்துப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது,' என்றனர்.


