/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேசிய கண்தான இருவார விழிப்புணர்வு ஊர்வலம் தேசிய கண்தான இருவார விழிப்புணர்வு ஊர்வலம்
தேசிய கண்தான இருவார விழிப்புணர்வு ஊர்வலம்
தேசிய கண்தான இருவார விழிப்புணர்வு ஊர்வலம்
தேசிய கண்தான இருவார விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : செப் 02, 2025 03:46 AM

தேனி : தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கண் மருத்துவ சிகிச்சைத்துறையின் சார்பில், தேசிய கண்தான இருவார விழா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கல்லுாரி விரிவுரை அரங்கம் அருகே துவங்கிய ஊர்வலத்தை முதல்வர் முத்துச்சித்ரா துவக்கிவைத்தார்.
நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சிவக்குமரன், உதவி நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் மணிமொழி, மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் முத்து, துறைத் தலைவர் டாக்டர் கணபதிராஜேஷ், மருத்துவ மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஊர்வலம் ரவுண்டானா வழியாக சென்று கூட்டரங்கத்தில் நிறைவடைந்தது. இதில் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், மருத்துவக்கல்லுாரி நிர்வாகம் இணைந்து துண்டு பிரசுரங்களை வழங்கி கண்தானம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊர்வலத்தில் மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, கண்களில் கருப்புத்துணி கட்டிச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் விஜய் ஆண்டனி, திவ்யா, தமிழ்செல்வி செய்திருந்தனர்.