ADDED : மார் 23, 2025 07:08 AM
தேனி : தேனி மாவட்டத்தில் வேளாண், தோட்டக்கலைத்துறை திட்டங்களில் நடந்து வரும் பணிகள், பெரியகுளத்தில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையம், வடகரையில் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லல்லி பார்வையிட்டார்.
கலெக்டர் முன்னிலை வகித்தார். கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. நேர்முக உதவியாளர் வளர்மதி, தோட்டக்கலை துணை இயக்குநர் நிர்மலா, பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.