/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாற்றுப் பணி ஆசிரியர்கள் வராததால் மாதிரிப் பள்ளி மாணவர்கள் அவதி மாற்றுப் பணி ஆசிரியர்கள் வராததால் மாதிரிப் பள்ளி மாணவர்கள் அவதி
மாற்றுப் பணி ஆசிரியர்கள் வராததால் மாதிரிப் பள்ளி மாணவர்கள் அவதி
மாற்றுப் பணி ஆசிரியர்கள் வராததால் மாதிரிப் பள்ளி மாணவர்கள் அவதி
மாற்றுப் பணி ஆசிரியர்கள் வராததால் மாதிரிப் பள்ளி மாணவர்கள் அவதி
ADDED : ஜூன் 12, 2025 02:46 AM
தேவதானப்பட்டி: சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு எல்.கே.ஜி., முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க 9 பேர் மாற்றுப்பணியில் பணிபுரிய மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் உத்தரவிட்டும் பணிக்கு யாரும் வராததால் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.
சில்வார்பட்டி அரசு மாதிரிமேல்நிலைப்பள்ளியில், சில்வார்பட்டி, நல்லகருப்பன்பட்டி, நாகம்பட்டி, தேவதானப்பட்டி உட்பட 30க்கும் அதிகமான கிராமங்களிலிருந்து மாணவ, மாணவிகள் எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை 1950 பேர் படிக்கின்றனர். இதில் எல்.கே.ஜி., முதல் ஐந்தாம் வகுப்பு வரை கடந்தாண்டு 400 பேர் படித்தனர். தற்போது 100 பேர் கூடுதலாக சேர்ந்து 500 மாணவர்கள் உள்ளனர்.
இவர்களுக்கு 11 ஆசிரியர்கள், ஆசிரியைகள் மட்டுமே உள்ளனர். இதனால் மாவட்டதொடக்கக்கல்வி அலுவலர், பெரியகுளம் தாலுகா அளவில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதலாக உள்ள 8 ஆசிரியைகள், ஒரு ஆசிரியர் என 9 பேரை மாற்றுப் பணிக்கு, ஜூன் 11 முதல் சில்வார்பட்டி பள்ளியில் பணிபுரிய உத்தரவிட்டார்.
இவர்களில் ஒருவர் கூட நேற்று பணிக்கு வரவில்லை. இதனால் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறுகின்றனர்.
மேல்நிலை வகுப்பிலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை: இப்பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் 350 மாணவர்கள், மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு 17 ஆசிரியர்கள், ஆசிரியைகள் இருக்க வேண்டிய நிலையில் 8 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். விரைவில் 9 பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தலைமயாசிரியர் பாண்டியன், மாவட்ட முதன்மை அலுவலரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.-