/உள்ளூர் செய்திகள்/தேனி/ முறைப்பாசன தண்ணீர் திறக்க கூட்டத்தில் முடிவு முறைப்பாசன தண்ணீர் திறக்க கூட்டத்தில் முடிவு
முறைப்பாசன தண்ணீர் திறக்க கூட்டத்தில் முடிவு
முறைப்பாசன தண்ணீர் திறக்க கூட்டத்தில் முடிவு
முறைப்பாசன தண்ணீர் திறக்க கூட்டத்தில் முடிவு
ADDED : செப் 24, 2025 08:28 AM
தேனி : பெரியாறு வைகை வடிநில கோட்டம் பழனிசெட்டிபட்டி நீர்வளத்துறை பிரிவு அலுவலகத்தில் பி.டி.ஆர்., கால்வாய், பெரியார் கால்வாயில் தண்ணீர் திறப்பு குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. செயற்பொறியாளர் மயில்வாகணன் தலைமை வகித்தார். உதவி பொறியாளர் பிரவீன்குமார் முன்னிலை வகித்தார். தமிழக தேசிய விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சீனிராஜ் உள்பட விவசாயிகள் பங்கேற்றனர்.
இரு வாய்க்கால் பாசன வசதி பெறும் 31 விவசாயிகள் பங்கேற்று நீர் திறந்து விட வலியுறுத்தினர். அதன் பின் அக்.1 முதல் 620 நாட்களுக்கு பி.டி.ஆர்., மற்றும் பெரியார் கால்வாய்களுக்கு தண்ணீர் திறப்பது,விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தவும், முறைபாசன முறைப்படி தண்ணீர் வழங்குவது உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.