Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாசில்லா பெரியகுளம் :: 50 மாடித்தோட்டங்கள் உருவாக விழிப்புணர்வு ஏற்படுத்திய தம்பதி

மாசில்லா பெரியகுளம் :: 50 மாடித்தோட்டங்கள் உருவாக விழிப்புணர்வு ஏற்படுத்திய தம்பதி

மாசில்லா பெரியகுளம் :: 50 மாடித்தோட்டங்கள் உருவாக விழிப்புணர்வு ஏற்படுத்திய தம்பதி

மாசில்லா பெரியகுளம் :: 50 மாடித்தோட்டங்கள் உருவாக விழிப்புணர்வு ஏற்படுத்திய தம்பதி

ADDED : செப் 29, 2025 06:16 AM


Google News
- பெ ரியகுளம் தென்கரை ஜே.ஆர்.ஆர்., நகர் கற்பக விநாயகர் கோயில் தெருஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை ஜெயராணி. இவரது கணவர் மெரைன் பொறியாளர் தாஸ். இவர்களது வீடு உள்ள இடத்தில்13 சென்ட் இடத்தில் 5 சென்ட் ஒதுக்கி வீட்டின் நுழைவுப்பகுதி முதல் அனைத்து இடங்களிலும் செடிகள், கொடிகள், மரங்களை வளர்த்து ஒரு பசுமை பூங்காவாக அமைத்து அசத்தி வருகின்றனர். அதற்கு'பிருந்தாவன் பூங்கா' என பெயரிட்டு பராமரித்து வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் பிறருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது கூடுதல் சிறப்பு.

புத்துணர்வாகும் மனம் தாஸ் ஓய்வு பெற்ற மெரைன் பொறியாளர், தென்க ரை : 1995ல் வீடு கட்டும் போது முதலில் திட்டம் போடும்போது பூங்கா அமைப்பதற்கு இடம் ஒதுக்கி விட்டுத்தான் வீடு கட்ட துவங்கினோம். எனது சிந்தனையும், எனது மனைவியின் சிந்தனையும் ஒன்றாக இருந்தது. ஐந்து செடிகளில் துவங்கிய பயணம் இன்று வீட்டை சுற்றி விதவிதமான மூலிகைச் செடிகள், அழகுச் செடிகள் வளர்த்து குடியிருக்கும் வீட்டை, எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் கூட்டு முயற்சியால் பூந்தோட்டமாக மாற்றி உள்ளோம். மா, தென்னை, வாழை, கொய்யா, கறிவேப்பிலை மரங்கள்.சிறியாநங்கை, துளசி, துாதுவளை, நந்தியாவட்டம், இன்சுலின் செடி, துணிச்சிபச்சலை, கற்றாழை, திராட்சை பந்தல், எலுமிச்சை, மாதுளை, மருதாணி நாவல், திருவாச்சி மல்லி, கனகாம்பரம், அரளி, செவ்வரளி, செம்பருத்தி, பச்சிலை வெற்றிலை, திப்பிலி, பிரண்டை, கற்பூரவல்லி என ஏராளமானமூலிகைகளைவளர்த்து வருகிறோம். தினமும் ஒரு மணி நேரம் பூங்காவில் உட்கார்ந்து தேநீருடன் துவங்கி புத்தகம் வாசிப்பில் நிறைவு செய்வோம். சுத்தமான ஆக்சிஜன் 24 மணி நேரமும் நமக்கு கிடைக்கிறது., என்றார். மாடித்தோட்டம் அமைக்க ஆலோசனை ஜெயராணி, ஓய்வு ஆசிரியை, தென்க ரை : டீ தூள் கரைசல் செடிகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. தோட்டத்தில் விழுகின்ற இலைகள், காய்கறி கழிவுகள், கால்நடைகள், ஆடுகளின் எரு, வாழைப் பழத்தோல், முட்டை ஓடுகள், முருங்கை இலைப்பொடி, சுண்டல், சோயா பீன்ஸ் போன்றவற்றை ஊற வைத்து நீர், புளித்த மோர் பயன்படுத்துகிறோம். எங்களது பிள்ளைகளுக்கு மட்டுமல்ல உறவினர்கள், நண்பர்களுக்கும் வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைக்கும் பல 'டிப்ஸ்'கள் வழங்கி வருகிறோம். எங்கள் வீட்டு பூங்காவை பார்த்து 50 க்கும் மேற்பட்டோர் வீட்டுத் தோட்டம், மாடித்தோட்டம் அமைத்துள்ளனர். இது இயற்கை நேசிப்புக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம்., என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us