ADDED : மார் 23, 2025 07:20 AM
போடி : குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் இளந்தமிழன் 42. நேற்று போடி இரட்டை வாய்க்கால் ரோட்டில் நடந்து வந்துள்ளார். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை கண்டதும் தப்பி செல்ல முயன்று உள்ளார். இளந்தமிழனை போலீசார் பிடித்து விசாரித்துள்ளனர்.
போலீசாரை அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். போடி டவுன் போலீசார் இளந்தமிழனை கைது செய்தனர்.