பித்தளை எழுத்துக்களை திருடியவர் கைது
பித்தளை எழுத்துக்களை திருடியவர் கைது
பித்தளை எழுத்துக்களை திருடியவர் கைது
ADDED : மார் 17, 2025 08:48 AM
தேனி : தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் திறப்பு விழா பலகையில் பெயர்கள் பித்தளையால் ஆன எழுத்துக்கள் பதிக்கப்பட்டிருந்தன.
இந்த எழுத்துக்கள் தொடர்ந்து திருடு போனது. இதனை கண்காணிக்க நகராட்சி கமிஷனர் ஏகராஜ் உத்தரவிட்டிருந்தார். நகராட்சியினர் அப்பகுதியில் உள்ளவர்கள் மூலம் கண்காணித்தனர். பித்தளை எழுத்துக்களை திருடிய தேனி பவர் ஹவுஸ் தெரு கார்த்திக்கை 40, அப்பகுதி ஆட்டோ டிரைவர்கள் உதவியுடன் நகராட்சி அதிகாரிகள் பிடித்தனர். நகராட்சி மேலாளர் முருகன் புகாரில், கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.