Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ காசி விஸ்வநாதர் கோயிலில் புதிய நந்தி பிரதிஷ்டை இன்று மகா கும்பாபிஷேகம்

 காசி விஸ்வநாதர் கோயிலில் புதிய நந்தி பிரதிஷ்டை இன்று மகா கும்பாபிஷேகம்

 காசி விஸ்வநாதர் கோயிலில் புதிய நந்தி பிரதிஷ்டை இன்று மகா கும்பாபிஷேகம்

 காசி விஸ்வநாதர் கோயிலில் புதிய நந்தி பிரதிஷ்டை இன்று மகா கும்பாபிஷேகம்

ADDED : டிச 01, 2025 06:20 AM


Google News
Latest Tamil News
கம்பம்: கம்பம் காசி விஸ்வநாதர் கோயிலில் நேற்று காலை புதிய நந்தி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், இன்று 22 ஆண்டுகளுக்கு பின் இன்று காலை 6:00 முதல் 7:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.

திருப்பணியில் கம்பம் இராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பாஸ்கர் சார்பில் மூலவர் விமானத்திற்கு நவீன வண்ணம் பூசுதல், அம்மன், விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி சன்னதிகளில் வண்ணம் பூசுதல், மராமத்து, கிழக்கு, மேற்கு சால கோபுரங்களின் வண்ணம் பூசப்பட்டு, மராமத்து, சிவன், அம்மன் சன்னதிகளில் உள்புற மண்டப வேலைகள், முருகன் சன்னதி சஷ்டி மண்டபத்தில் தட்டோடுகள் பதித்தல், அம்மன், சிவன் சன்னதிகளில் மேல் தளத்தில் தட்டோடு பதித்தல், அரசமர விநாயகர் மராமத்து, நவக்கிரகம், பைரவர் சன்னதி, பலிபீடம், கொடிமரம் செப்புத் தகடு பாலீஸ் அமைத்து, கல்காரம் பெயிண்டிங் பணிகளை செய்து தந்துள்ளார்.

அதே போல் முன்னாள் ரத உற்ஸவ கமிட்டித் தலைவர் நடராஜ பிள்ளை குடும்பத்தினர் சார்பில் பழைய நந்தி சேதமடைந்திருந்ததால், புதிய நந்தி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நந்திதேவர் கூடமும் பராமரிப்பு செய்து தரப்பட்டது. நேற்று காலை புதிய நந்தி பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் திருமலை கற்பகம், வ.உ.சி., வேளாளர் சங்கத் தலைவர் திருமலை சங்கர், சி.பி.யூ., மேல்நிலைப் பள்ளி தாளாளர் திருமலை சுதாகரன், ந.ம.மு.க., தலைவர் ஜெகநாத் மிஸ்ரா, எம்.பி.எம்., மேல்நிலைப் பள்ளி தாளாளர் மகுடகாந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us