Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ மதுரை-போடி அகல ரயில்பாதை துவங்கி மூன்றாண்டுகள் நிறைவு

மதுரை-போடி அகல ரயில்பாதை துவங்கி மூன்றாண்டுகள் நிறைவு

மதுரை-போடி அகல ரயில்பாதை துவங்கி மூன்றாண்டுகள் நிறைவு

மதுரை-போடி அகல ரயில்பாதை துவங்கி மூன்றாண்டுகள் நிறைவு

ADDED : மே 25, 2025 06:52 AM


Google News
தேனி : மதுரையில் இருந்து தேனிக்கு அகல ரயில்பாதை பணிகள் முடித்து 2022 மே 27 ல் ரயில் இயங்க துவங்கியது. மூன்றாண்டுகள் முடியும் நிலையிலும் மாவட்டத்தில் இருந்து காலையில் மதுரைக்கு ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை கானல் நீராக உள்ளது.

போடி -மதுரை இடையே இருந்த மீட்டர்கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி 2011ல் துவங்கியது. பணிகள் நிறைவடைந்து 2022 மே 27 ல் மதுரையில் இருந்து தேனிக்கு ரயில் இயக்கப்பட்டது. அதன்பின் 2023 ஜூன் 15ல் போடி ரயில்வே ஸ்டேஷன் பயன்பாட்டிற்கு வந்தது. இங்கிருந்து தேனி வழியாக தினசரி மாலை மதுரை பாசஞ்சர், வாரத்திற்கு மூன்று நாட்கள் சென்னை சென்ட்ரல் சூப்பர்பாஸ்ட் ரயில் இயக்கப்படுகிறது. மறு மார்கத்தில் தினசரி காலை மதுரையில் இருந்து போடிக்கு பாசஞ்சர்,மூன்று நாட்கள் சென்னை சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களை தேனி மாவட்ட மக்கள் மட்டுமின்றி கேரள மாநிலத்திற்கு சுற்றுலா செல்பவர்கள், சபரிமலை ஐயப்பன் கோயில் செல்பவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இந்த ரயில்கள் பயணம் துவங்கி நாளை மறுதினத்துடன் மூன்றாண்டுகள் நிறைவடைகிறது. ஆனால், தேனி மாவட்டத்திற்கு புதிய ரயில், பண்டிகை நாட்கள், சபரிமலை சீசன் சிறப்பு ரயில்கள் இயக்கப்படாதது மாவட்ட மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.

தினசரி காலையில் போடியில் இருந்து மதுரைக்கும், சென்னைக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும், அதே போல் மதுரையில் இருந்து புறப்படும் ராமேஸ்வரம், கோவை, புனலுார், குருவாயூர் ரயில்களில் ஏதாவது ஒன்றை போடியில் இருந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்ற ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us