/உள்ளூர் செய்திகள்/தேனி/ இறைச்சி கழிவுகள் மேலாண்மையில் உள்ளாட்சிகள்... திணறல்: உரமாக மாற்றும் திட்டம் அமல்படுத்துவது அவசியம் இறைச்சி கழிவுகள் மேலாண்மையில் உள்ளாட்சிகள்... திணறல்: உரமாக மாற்றும் திட்டம் அமல்படுத்துவது அவசியம்
இறைச்சி கழிவுகள் மேலாண்மையில் உள்ளாட்சிகள்... திணறல்: உரமாக மாற்றும் திட்டம் அமல்படுத்துவது அவசியம்
இறைச்சி கழிவுகள் மேலாண்மையில் உள்ளாட்சிகள்... திணறல்: உரமாக மாற்றும் திட்டம் அமல்படுத்துவது அவசியம்
இறைச்சி கழிவுகள் மேலாண்மையில் உள்ளாட்சிகள்... திணறல்: உரமாக மாற்றும் திட்டம் அமல்படுத்துவது அவசியம்
ADDED : செப் 14, 2025 04:04 AM

மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்து பகுதிகளிலும் சுமார் 2ஆயிரத்திற்கும் அதிகமான இறைச்சி கடைகள் உள்ளன. பிராய்லர் இறைச்சி கடைகளில் தினமும் சுமார் 7 முதல்8 டன் இறைச்சி விற்பனையாகிறது. இதே போல் டன் கணக்கில் ஆடுகள், மீன்கள் உள்ளிட்டவை விற்பனையாகின்றன. விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் விற்பனை கூடுதலாக இருக்கும். இவற்றை கடைகளில் விற்பனை செய்யும் போது ஏற்படும் கழிவுகள் உரிய முறையில் அழிப்பது இல்லை. இதனால் கடைக்காரர்கள் இறைச்சி கழிவுகளை நீர் நிலைகள், ரோட்டோரங்கள், சாக்கடைகள், வன பகுதிகளில் கொட்டுவது வாடிக்கையாக உள்ளது.
இதனால் ரோட்டோரங்களில் துர்நாற்றம் வீசுகிறது. உள்ளாட்சிகளில் கெட்டுப்போன இறைச்சி விற்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் அதிகாரிகள் கழிவுகள் முறையாக அகற்றப்படுகிறதா என கண்காணிப்பதில்லை. குடியிருப்பு பகுதி சாக்கடைகளில் கொட்டப்படும் கழிவுகளால் ஆங்காங்கே தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன.
இறைச்சிகழிவுகளும் தெருநாய்கள் தொல்லையும்: இறைச்சி கழிவுகள் கொட்டும் இடங்கள், விற்பனை கடைகள் உள்ள பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் உள்ளன. அவற்றில் சில தோல் நோய்களுடன் சுற்றுகின்றன.
சில விற்பனையாளர்கள் இறைச்சி துண்டுகளை வீசுவதால் தெருநாய்கள் கூட்டமாக அதே பகுதியில் நிரந்தரமாகின்றன. கழிவுகள் கொட்டும் பகுதியில் அதனை சாப்பிட கும்பலாக சுற்றுகின்றன. இதனால் அப்பகுதிகளில் செல்வோர், டூவீலர்களில் செல்வோர் நாய்கடியால் பாதிக்கின்றனர்.
உரமாக மாற்ற வேண்டும் இறைச்சி கழிவுகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் சேகரித்து உரமாக மாற்றும் திட்டம் செயல்படுத்த வேண்டும். முறையாக கழிவுகளை அகற்ற வழிகாட்டுதல் செய்தால் அப்பகுதியில் சுற்றி திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்திடலாம். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.