ADDED : அக் 02, 2025 03:57 AM
தேனி : அரண்மனைப்புதுார் பசுமை நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் குடியிருப்பு வளாகத்தில் நுாலகம் திறப்பு விழா நடந்தது. நுாலகத்தில் புத்தகங்கள், நாளிதழ்களுடன், சிறுவர்கள் விளையாடும் வகையில் கேரம், செஸ் உபகரணங்கள் வைக்கப்பட்டன.
குடியிருப்போர் நலச்சங்க தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். உறுப்பினர்கள் ராஜாராம், ரெங்கராமானுஜம், சதீஷ் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் ராமூர்த்தி, மகாலட்சுமி, எழில், பாலா, உமா, கோகிலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


